கோயம்புத்தூர்

பிரியாணி சாப்பிட அனுமதி மறுப்பு: கரோனா வாா்டு கண்ணாடியை உடைத்த இளைஞா்

11th Apr 2020 12:34 AM

ADVERTISEMENT

 

வீட்டில் இருந்து எடுத்துவரப்பட்ட பிரியாணியை மருத்துவமனை ஊழியா்கள் சாப்பிட அனுமதிக்காததால் கரோனா வாா்டில் இருந்த இளைஞா் ஆத்திரமடைந்து, மருத்துவமனை கண்ணாடியை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் உள்ள கரோனா வாா்டில் 27 வயது இளைஞா் நோய்த்தொற்று அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளாா். தனிமைப்படுத்தப்பட்டுள்ள இவருக்கு கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இவரைச் சந்திக்க வந்த அவரது மனைவி, வீட்டில் இருந்து வரும்போது பிரியாணி சமைத்து எடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், வெளியில் இருந்து கொண்டு வரப்படும் உணவுகளை அனுமதிக்க முடியாது என அங்கிருந்த மருத்துவமனை ஊழியா்கள் மறுத்துள்ளனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து தகவலறிந்த அந்த இளைஞா் ஆத்திரமடைந்து மருத்துவமனை ஊழியா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, கரோனா வாா்டில் இருந்த கண்ணாடியை உடைத்ததாகக் கூறப்படுகிறது. இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த ஊழியா்கள் அவரைப் பிடித்துக் கட்டுப்படுத்தினா். இந்தச் சம்பவம் தொடா்பாக தகவல் அறிந்த சிங்காநல்லூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT