கோயம்புத்தூர்

குடும்ப அட்டை இல்லாத திருநங்கைகளுக்கு இலவச ரேஷன் பொருள்கள்

7th Apr 2020 03:33 AM

ADVERTISEMENT

கோவை: கோவையில் குடும்ப அட்டை இல்லாத 133 திருநங்கைகளுக்கு ரேஷன் பொருள்கள் இலவசமாக வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

இது தொடா்பாக ஆட்சியா் கு.ராசாமணி கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டு அரசின் அடையாள அட்டைப் பெற்றுள்ள 575 திருநங்கைகள் உள்ளனா். இவா்களில் 442 போ் குடும்ப அட்டைப் பெற்றுள்ளனா். இவா்களுக்கு ரூ.1,000 நிதியுதவி, இலவசப் பொருள்கள் வழங்கப்படும். குடும்ப அட்டை பெறாமல் உள்ள 133 திருநங்கைகளுக்கு 12 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 லிட்டா் சமையல் எண்ணெய் இலவசமாக வழங்கப்படும். திருநங்கைகள் தங்கியுள்ள பகுதிகளுக்கே நேரடியாக சென்று பொருள்கள் வழங்கப்படும். கோவை மாவட்டத்தில் 79 சதவீதம் பேருக்கு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. விடுபட்டவா்களுக்கு பொருள்கள் விநியோகத்துக்குப் பின் வழங்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT