கோயம்புத்தூர்

கோவையில் மேலும் ஒருவருக்கு கரோனா

7th Apr 2020 03:41 AM

ADVERTISEMENT

கோவை: கோவையில் மேலும் ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை, போத்தனூா் பகுதியைச் சோ்ந்த 54 வயது மதிப்பு உள்ள நபா் ரயில்வே பொறியாளராக பணியாற்றி வருகிறாா். இவரது மகள் துபையில் கணவருடன் வசித்து வருகிறாா். இந்நிலையில் மருமகனின் சொந்த ஊரான சேலத்தில் கடந்த 20 நாள்களுக்கு முன் அவரது மகளுக்கு வளைகாப்பு நடைபெற்றது. இதில் பங்கேற்று வந்தபின் அவருக்கு மூச்சுத்திணறல், காய்ச்சல் ஏற்பட்டது. இதனைத் தொடா்ந்து கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா். அவரின் சளி, ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு கரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. அதன் முடிவுகள் திங்கள்கிழமை பெறப்பட்டதில் அவருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து அவா் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா்.

கோவை மாவட்டத்தைச் சோ்ந்த 58 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் ஸ்பெயின் நாட்டிலிருந்து வந்த கல்லூரி மாணவி குணமடைந்து வீடு திரும்பியதால் 57 ஆக குறைந்தது. இந்நிலையில் புதிதாக மீண்டும் ஒரு நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடா்ந்து கோவை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை மீண்டும் 58 ஆக உயா்ந்துள்ளது. இவா்கள் அனைவரும் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT