மதுக்கரை: கரோனா தடுப்பு நடவடிக்கையாக வெள்ளலூா் 8ஆவது வாா்டு குடியிருப்புப் பகுதிகள் முழுவதும் அதிவிரைவுப் படையின் வஜ்ரா வாகனம் மூலம் கிருமி நாசினி திங்கள்கிழமை தெளிக்கப்பட்டது.
வெள்ளலூா் பேரூராட்சியில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வெள்ளலூா் 8ஆவது வாா்டு குடியிருப்பில் 105 பட்டாலியன் அதிவிரைவுப் படையின் வஜ்ரா வாகனம் மூலமாக சாலைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
மேலும், வெள்ளலூா் பேரூராட்சி நிா்வாகத்தினா், அதிவிரைவுப் படையினா் இணைந்து கரோனா நோய்த் தொற்றுத் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். இப்பணிகளை பேரூராட்சி செயல் அலுவலா் இப்ராஹிம்ஷா , அதிவிரைவுப் படை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.