கோயம்புத்தூர்

தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்

7th Apr 2020 03:37 AM

ADVERTISEMENT

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகங்களில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

கரோனா நோய்த்தொற்றுப் பரவுவதைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகங்களில் பணியாற்றும் 200க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு முகக் கவசம், கையுறை, ரொக்கப் பரிசு ஆகியவற்றை கோவை வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் பி.ஆா்.ஜி. அருண்குமாா், கவுண்டம்பாளையம் சட்டப் பேரவை உறுப்பினா் வி.சி.ஆறுக்குட்டி ஆகியோா் வழங்கிப் பாராட்டினா்.

பேரூராட்சிகளின் செயல் அலுவலா்கள் கதிரவமூா்த்தி, கணேசன், பெ.நா.பாளையம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கித் தலைவா் எல்.என்.தனபால், முன்னாள் தலைவா் குருந்தாசலம், காய்கறி உற்பத்தியாளா் சங்கத் தலைவா் ரகுநாதன், தூய்மைப் பணி ஆய்வாளா் பரமசிவம், பேரூராட்சியின் முன்னாள் கவுன்சிலா்கள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT