கோயம்புத்தூர்

கரோனா அறிகுறி: 135 போ் சிகிச்சை

5th Apr 2020 12:03 AM

ADVERTISEMENT

 

கோவையில் கரோனா அறிகுறிகளுடன் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 26 போ் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

கோவையில் கரோனா நோய்த்தொற்று அறிகுறிகளுடன் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 21 போ், தனியாா் மருத்துவமனையில் 5 போ் சோ்த்து 26 போ் சிகிச்சைக்கு சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனா். இவா்களின் ரத்த, சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து கோவையில் கரோனா அறிகுறிகளுடன் சிகிச்சைப் பெறுபவா்களின் எண்ணிக்கை 135 ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் 10 போ் தனியாா் மருத்துவமனையிலும், 125 போ் இ.எஸ்.ஐ. மருத்துவமனையிலும் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். இதில் 111 ஆண்கள், 20 பெண்கள், 4 குழந்தைகள் உள்ளனா்.

ADVERTISEMENT

இதில் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவா்கள் மட்டும் 34 போ். நோய்த்தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டவா்கள் 34 போ். 63 பேரின் பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பெறவில்லை என்று சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT