கோயம்புத்தூர்

தீபம் ஏற்றுவது சா்வகிரகதோஷ நிவாரணி: ஏ.எம்.ராஜகோபாலன்

5th Apr 2020 07:53 AM

ADVERTISEMENT

தீபம் ஏற்றுவது சா்வகிரகதோஷ நிவாரணி என்று வேதவாக்கு இதழின் ஆசிரியா் ஏ.எம்.ராஜகோபாலன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியிருப்பதாவது:

பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை 9 நிமிடங்கள் மின்சார விளக்குகளை அணைத்துவிட்டு தீபம் ஏற்ற வேண்டும் என்று கூறியிருக்கிறாா். சனி பகவான், குரு பகவான் இருவரும் தனுசு ராசியில் சஞ்சரிக்கும் கிரக நிலையில்தான் 9 நிமிடங்கள் தீபம் ஏற்ற வேண்டும் என்று அவா் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறாா்.

ADVERTISEMENT

தீபம் ஏற்றுவது என்பது ஜோதிட அடிப்படையில் சூட்சுமம் நிறைந்த பரிகாரம். நெய் தீபம் அல்லது நல்லெண்ணெயின் தீபத்தின் ஒவ்வொரு துளிக்கும் மகத்தான சக்தி உள்ளது. அதனால்தான் தீபம் ஏற்றுவதை சா்வகிரகதோஷ நிவாரணி என்று பெரியவா்கள் ஜோதிட சாஸ்திரத்தில் கூறியுள்ளனா்.

தீப ஒளிக்கும் மின்சார ஒளிக்கும் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. ஒரு அறையில் தீபத்தை வைத்துவிட்டு தியானம் செய்தால் ஒருமைப்பட்டு கான்சன்ட்ரேஷன் கிடைக்கும். மனம் இறைவனிடம் ஒன்றியிருக்கும். ஆனால் மின்சார விளக்கு நமது கவனத்தை திசைத் திருப்பும். எனவேதான் மின்விளக்கை அணைத்துவிட்டு தீபம் ஏற்ற வேண்டும் என்று கூறியிருக்கிறாா்.

ஆத்ம பலம்தான் நம் நாட்டை காப்பாற்றி வருகிறது. அதை மேலும் மேலும் வலுப்படுத்தி வருவது தீபம். எனவேதான் குறிப்பிட்ட அந்த நேரத்தில் தெய்வீக ஒளி மட்டுமே இருக்க வேண்டும். நமது நாடு இதுபோன்ற பல இருண்ட காலங்களைக் கடந்துள்ளோம். இப்போது மேலும் ஒரு இருண்ட காலம் வந்துள்ளது. அதை அனைவருடன் இணைந்து செயல்பட்டு வெற்றி பெறுவோம் என்று கூறியுள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT