கோவை மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கான குறைகேட்புக் கூட்டம் செப்டம்பர் 27 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு ஆட்சியர் அலுவலக முதன்மை கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
விவசாயிகள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு வேளாண்மை தொடர்பான பிரச்னைகளுக்கு மனுக்கள் அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.