அன்னூரை அடுத்துள்ள காட்டம்பட்டி, வரதையம்பாளையம் பெருமாள் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விநாயகர், பெருமாள், ஆஞ்சநேயருக்கு அபிஷேக ஆராதனை, வடை மாலை சாற்றுதல் சனிக்கிழமை நடைபெற்றது. தொடர்ந்து கோட்டைப்பாளையம் பிருந்தாவன பஜனை குழுவினர் மற்றும் குன்னத்தூர்புதூர் பிருந்தாவன பஜனை குழுவினரின் பஜனைகள் நடைபெற்றன. தொடர்ந்து ஸ்ரீ ஹரிகிருஷ்ணா கிராமிய மகளிர் இசைக் குழுவினரின் பஜனை நடைபெற்றது.
தொடர்ந்து திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்சிக்கான ஏற்பாடுகளை தமிழ் மாத முதல் சனிக்கிழமை வழிபாட்டுக் குழுவினர் செய்திருந்தனர்.