கோயம்புத்தூர்

பள்ளி மாணவர்களுக்கான வேளாண் சிறப்புப் பயிற்சி முகாம்

22nd Sep 2019 05:42 AM

ADVERTISEMENT

பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த வீரபாண்டி பிரிவில் உள்ள புனித ஜான் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் வேளாண்மை பயிலும் மாணவர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
இப்பள்ளியில் மேல்நிலை வகுப்புகளில் வேளாண்மை ஒரு பாடப் பிரிவாக உள்ளது. இதில் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். இவர்களுக்கு வேளாண்மைச் செயல்பாடுகள் குறித்து பிரத்யேகப் பயிற்சிகள் வழங்குவதற்காக பள்ளி வளாகத்திலேயே தோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 
இந்நிலையில் மாணவர்களுக்கு நேரடிக் களப் பயிற்சி வழங்குவதற்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. பள்ளித் தாளாளர் ஆர்.பி.அரவிந்தன், முதல்வர் பாஸ்கரன் ஆகியோர் மேற்பார்வையில் நடந்த முகாமில் நாற்று நடும் பயிற்சியை விவசாயி விஜயன் வழங்கினார். 
மேலும், உழவு செய்து மண்ணைப் பண்படுத்துதல், வரப்புகளை உயர்த்திக் கட்டுதல், சவலை ஓட்டுதல் உள்ளிட்ட பயிற்சிகளையும் அவர் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை விவசாய ஆசிரியர் மோகன் செய்திருந்தார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT