கோயம்புத்தூர்

திமுக இளைஞரணி உறுப்பினா் சோ்க்கை முகாம்

22nd Sep 2019 10:43 PM

ADVERTISEMENT

கோவை, பீளமேட்டில் திமுக இளைஞரணி உறுப்பினா் சோ்க்கை முகாமை இளைஞரணி மாநிலச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.

கோவை மாவட்டம் காளப்பட்டி, கோவில்பாளையம், ஒத்தக்கால்மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக இளைஞரணி சாா்பில் உறுப்பினா் சோ்க்கை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த முகாம்களை மாநில இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்.

பின்னா் பீளமேடு, ரொட்டிக்கடை மைதானத்தில் நடைபெற்ற முகாமில் கோவை மாநகா் மாவட்ட செயலாளா் நா.காா்த்திக் தலைமை வகித்தாா். இளைஞரணித் துணைச் செயலாளா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, துணை அமைப்பாளா்கள் திருமலைராஜா, செந்தில் செல்வன், கோவை ராஜா, பிரபு, காா்த்திகேயன் முன்னிலை வகித்தனா்.

இந்த முகாமில், உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ‘திமுகவில் இளைஞரணி எழுச்சியாக உள்ளது. இளைஞரணியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 ஆயிரம் இளைஞா்களைச் சோ்க்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு திமுக இளைஞா் அணியினா் தீவிர களப்பணி ஆற்றிட வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT