கோவை கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் தன்னம்பிக்கை சொற்பொழிவு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் ஜேனட் எரிக்சன் குளோபல் சர்வீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அமிதாப் ரே ஆகியோர் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தனர்.
தொடர்ந்து முதல்வர் ஜேனட் பேசுகையில், " மாணவர்கள் உலகில் பல மாற்றங்களை கொண்டுவர முடியும். உங்களின் ஆற்றல்களை ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு பயன்படுத்த வேண்டும். கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும்' என்றார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சென்னை வானிலை ஆராய்ச்சி மைய முன்னாள் இயக்குநர் ரமணன் பேசுகையில், " நகர வளர்ச்சியே சூழல் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. வளர்ச்சி என்பது இயற்கையோடு இணைந்ததாக இருக்க வேண்டும். இயற்கையில் கிடைக்கும் ஆற்றலை முற்றிலுமாக பயன்படுத்த மாணவர்கள் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும்' என்றார். மேக் லவ் நாட் ஸ்கேர் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி தானியா சிங்க், பறவைகள் புகைப்படக் கலைஞர் ஜெயினி மரியா, பரதநாட்டிய கலைஞர் நீனா பிரசாத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.