கோவை, சரவணம்பட்டியில் உள்ள சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையம் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக் கல்லூரியில் சங்கரா அகாதெமி ஆஃப் எக்ஸலன்ஸ் தொழில்முறை மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையம் தொடக்க விழாவில் கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். சங்கரா கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.
பாரதியார் பல்கலைக்கழகத்தின் அண்ணா ஐ.ஏ.எஸ். அகாதெமியின் ஒருங்கிணைப்பாளர் பத்மநாபன், சரக்குகள் மற்றும் சேவைகள் துறை ஆணையர் கோவிந்தராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தை தொடங்கி வைத்தார்.
வணிகவியல் கல்லூரியின் துணை முதல்வர் பெர்னார்டு எட்வர்ட் நன்றி கூறினார்.