ஹிந்தி மொழி திணிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும்: மாதர் சம்மேளன மாநாட்டில் தீர்மானம்

ஹிந்தி மொழி திணிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று இந்திய மாதர் தேசிய சம்மேளன மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஹிந்தி மொழி திணிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று இந்திய மாதர் தேசிய சம்மேளன மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் கோவை மாவட்ட 14 ஆவது மாநாடு கோவை ஜீவா இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டு கொடியை ஏ.அமிர்தம் ஏற்றினார். மாநாட்டுக்கு எஸ்.சுதா, சி.நந்தினி, ஜே.கலா ஆகியோர் தலைமை தாங்கினார். மாநாட்டில் மாநிலச் செயலாளர் பி.பத்மாவதி, மாநில துணைச் செயலாளர் நிஷா சத்தியன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் வி.எஸ்.சுந்தரம், பி.மெளனசாமி  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 
இதில், ஒரே மொழி, ஒரே தேசம் என்ற அடிப்படையில் ஹிந்தி பேசாத பிற மாநிலங்களின் மீது மத்திய அரசு ஹிந்தி மொழியைக் கட்டாயமாக திணிக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. இது பல மொழி பேசும் மக்களைக் கொண்ட இந்திய ஒன்றியம் என்ற உயரிய கோட்பாட்டை சிதைத்துவிடும். எனவே, இதை மத்திய அரசு கைவிடவேண்டும். 
தமிழகத்தில் ஜாதி, கௌரவ படுகொலைகளை தடுத்து நிறுத்திடவும், நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவையில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கிடவும் சட்டம் இயற்ற வேண்டும். பொது விநியோக முறையை அழித்திடும் மத்திய, மாநில அரசுகளின் முடிவை கைவிட வலியுறுத்தியும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். ஊடகங்களில் பெண்களை ஆபாசமாக சித்தரிப்பதைத் தடுப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
மாநாட்டில், மாவட்டத் தலைவராக எம்.நிர்மலாவும், துணைத் தலைவர்களாக ஜே.கலா, ஏ.அமிர்தம், பூர்ணிமா நந்தினி ஆகியோரும், மாவட்டச் செயலாளராக கே.சுமதியும், மாவட்ட துணைச் செயலாளர்களாக எஸ்.சுதா, ரஞ்சினி கண்ணம்மா, பொருளாளராக சி.நந்தினியும் தேர்வு செய்யப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com