பாகிஸ்தான் ஆதரவுக் குழுக்களுடன் தொடர்பு: மேற்கு வங்க இளைஞரிடம் விசாரணை

பாகிஸ்தான் ஆதரவுக் குழுக்களுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இளைஞரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

பாகிஸ்தான் ஆதரவுக் குழுக்களுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இளைஞரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
கோவை, இடையர் வீதியில் உள்ள செல்லிடப்பேசி பழுதுநீக்கும் கடையில் இளைஞர் ஒருவர் தனது செல்லிடப்பேசியைப் பழுது நீக்கக் கொடுத்துள்ளார். ஆனால், இரண்டு நாள்களுக்கு மேலாகியும் அவர் செல்லிடப்பேசியைத் திரும்பப் பெற வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த செல்லிடப்பேசி கடைக்காரர், அவரது செல்லிடப்பேசியை ஆய்வு செய்தபோது, அதில் கட்செவி அஞ்சல் குழுக்களில் துப்பாக்கி குறித்த தகவல்கள் பரிமாறப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து கோவை மாநகர போலீஸாருக்கு கடை உரிமையாளர் தகவல் தெரிவித்தார். இதன்பேரில் செல்லிடப்பேசியைக் கைப்பற்றி சிறப்புப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தியபோது, கோவை, இடையர் வீதியில் வசிக்கும் பாரூக் கௌசீர் (25) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பாரூக் கோவையில் தங்கி நகைப் பட்டறையில் பணியாற்றி வருவதும், அவரது கட்செவி அஞ்சல் கணக்கில்
ல்ஹந்ண்ள்ற்ஹய் ம்மத்அண்ஈ, ழ்ங்ம்ங்ம்க்ஷங்ழ் 27 ச்ங்க்ஷ 2019 என்ற இரு குழுக்களில் அவர் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. 
மேலும், அவருடன் தங்கியிருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை அழைத்து போலீஸார் விசாரித்தனர். பின்னர் அவர்களின் சுயவிவரங்களைப் பெற்றுக் கொண்டு அனுப்பிவைத்தனர். 
இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து மாநகர காவல் ஆணையர் சுமித் சரணிடம் கேட்டபோது, அவர் இதை மறுத்தார். கோவை மாநகரில் இதுபோன்ற எவ்வித சோதனைகளும், விசாரணைகளும் நடத்தப்படவில்லை எனவும், இதன் காரணமாகப் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com