கோயம்புத்தூர்

பெண்ணிடம் நகை பறிப்பு: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

13th Sep 2019 07:56 AM

ADVERTISEMENT

மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்களிடம் பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் செயினை பறித்துச் சென்றனர்.
மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை ரேயான் நகர் பகத்சிங் காலனியைச் சேர்ந்தவர் திருமூர்த்தி மனைவி ரூபி (35). இவர் தனது நண்பர் சித்ரா உடன் மேட்டுப்பாளையம், குட்டையூர் பகுதியிலுள்ள  சாய்பாபா கோயிலுக்கு சாமி கும்பிட செல்ல இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தனர். 
ஆலாங்கொம்பு அருகே சென்றபோது பின்னாள் இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் சித்ராவின் கழுத்தில் இருந்த நான்கு பவுன் நகை பறித்துச் சென்றனர். இதில் நிலை தடுமாறி ரூபியும், சித்ராவும் கீழே விழுந்தனர். இதுகுறித்து சிறுமுகை காவல் நிலையத்தில் ரூபி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மர்மநபர்களைத் தேடி வருகின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT