கோயம்புத்தூர்

புண்யா அறக்கட்டளை சார்பில் கேரளத்துக்கு வெள்ள நிவாரணம்

10th Sep 2019 11:08 AM

ADVERTISEMENT

கோவை புண்யா பவுண்டேஷன் சார்பில் கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் அண்மையில் வழங்கப்பட்டன.
கேரள மாநிலத்தில் அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் வயநாடு பகுதி பழங்குடியின மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்காக புண்யா பவுண்டேஷன் சார்பில் ரூ.2.50 லட்சம் மதிப்பிலான உடைகள், உணவு, வீடுகளுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் திரட்டப்பட்டன.
இவற்றை பவுண்டேஷனின் நிர்வாகிகள் நேரில் எடுத்துச் சென்று கல்பெட்டா பகுதியில் வசிக்கும் 64 பழங்குடியினர் குடும்பங்களுக்கு வனத் துறையினரின் உதவியுடன் வழங்கினர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT