கோயம்புத்தூர்

தனியார் நிறுவனங்களுடன் காருண்யா பல்கலை. புரிந்துணர்வு ஒப்பந்தம்

10th Sep 2019 11:10 AM

ADVERTISEMENT

மாசுக் கட்டுப்பாடு, திடக்கழிவு மேலாண்மை, எதிர்கால தொழில்நுட்பத் தேவைகள் தொடர்பான ஆராய்ச்சிக்காக 2 தனியார் நிறுவனங்களுடன் கோவை காருண்யா பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
கழிவுநீர் மறு பயன்பாடு, நீர் சுத்திகரிப்பு, காற்று மாசு தடுப்பு, திடக்கழிவு மேலாண்மை போன்ற துறைகளில் இணைந்து ஆய்வுகள் மேற்கொள்வதற்காக பொல்லுகேர் இந்தியா என்ற நிறுவனத்துடனும், தானியங்கி கார்களுக்கான செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு போன்ற எதிர்காலத் தொழில்நுட்பத் தேவைகள் தொடர்பான ஆராய்ச்சிக்காக ஜாஸ்மின் இன்போடெக் மென்பொருள் நிறுவனம் ஆகியவற்றுடன் காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஒப்பந்தம் செய்துள்ளது.
பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொல்லுகேர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சாய்பாபு, ஜாஸ்மின் இன்போடெக் தலைமை நிர்வாக அதிகாரி சிவசங்கரபிரசாத் ஆகியோரும், நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தர் பால் தினகரனும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். 
நிகழ்வின்போது, பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர், இணை துணைவேந்தர் இ.ஜே.ஜேம்ஸ், பதிவாளர் எலைஜா பிளசிங், பல்கலைக்கழக பேராசிரியர்கள் உடனிருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT