கோயம்புத்தூர்

ஒரு மாத காலமாக முழுக் கொள்ளளவுடன் உள்ள சோலையாறு அணை

10th Sep 2019 06:57 AM

ADVERTISEMENT

தொடர் மழை காரணமாக கடந்த ஒரு மாத காலமாக முழுக் கொள்ளளவுடன் நீர்மட்டம் குறையாமல் சோலையாறு அணை காட்சி அளிக்கிறது.
கோவை மாவட்டம், வால்பாறை வட்டாரத்தில் கடந்த ஜூன் மாதம் பருவ மழை பெய்யத் துவங்கியது. துவக்கத்தில் சாரல் மழையாக இரண்டு மாதங்கள் பெய்த நிலையில், ஆகஸ்ட் மாதத் துவக்கத்தில் இருந்து தொடர்ந்து கனமழை பெய்தது. வறண்டு காணப்பட்ட சோலையாறு அணைக்கு மழையால் நீர்வரத்து அதிகரித்து, கடந்த மாதம் 11-ஆம் தேதி 160 அடியை எட்டி, அணை முழுமையாக நிறைந்தது.
அதன்பிறகு தினந்தோறும் மழை பெய்கிறது. சில நாள்களில் இடைவிடாது கனமழையும் பெய்து வருகிறது. இதனால் அணைக்குத் தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால், முழு கொள்ளளவுடன் கடந்த ஒரு மாத காலமாக அணை காட்சி அளிக்கிறது.
அணையின் நீர்மட்டம் 164 அடிக்கு மேல் உயர்ந்தால் மட்டுமே மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்படும். ஆனால் இரண்டு மின் நிலையங்கள்,  சேடல்டேம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கு நீர் வெளியேற்றப்படுவதால், மதகுகளைத் திறந்து உபரி நீரை வெளியேற்றும் வாய்ப்பு ஏற்படவில்லை. கடந்த திங்கள்கிழமை காலை நிலவரப்படி அணைக்கு 3,300.57 கனஅடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து மொத்தம் 3,760.41 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 162.17 அடியாக உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT