கோயம்புத்தூர்

அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

10th Sep 2019 11:16 AM

ADVERTISEMENT

கோவையில் உள்ள அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசின் "போஷன் அபியான்' திட்டத்தின் கீழ் செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனை ஒட்டி கோவையில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
வீட்டுக்கு வீடு "பழகு ஊட்டச்சத்து' உணவு என்ற தலைப்பின் அடிப்படையில் பெற்றோர்களுக்கும், சிறுவர்களுக்கும் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு அளிக்கப்பட உள்ளது.
இதன் ஒரு பகுதியாக பெரியார் நகர் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெற்றோர்களுக்கும், சிறுவர்களுக்கும் ஊட்டச்சத்து உணவுகளின் பயன்கள், சத்தான உணவு வகைகள் குறித்து தகவல்கள் அளிக்கப்பட்டன. இதில் அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களும் பங்கேற்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT