கோயம்புத்தூர்

வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1.25 டன் போதைப் பொருள்கள் பறிமுதல்

7th Sep 2019 06:58 AM

ADVERTISEMENT

கோவை அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1.25 டன் எடையுள்ள தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
கோவை, சின்னவேடம்பட்டி அஞ்சுகம் நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (28). இவரது வீட்டில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் (குட்கா, பான்மசாலா) பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் கே.தமிழ்ச்செல்வன் தலைமையிலான குழுவினர் மணிகண்டனின் வீட்டைச் சோதனையிட்டனர்.  அப்போது அவரது வீட்டின் அறைகளிலும், வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரிலும் சுமார் 1.25 டன் எடையுள்ள தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை உணவுப் பகுப்பாய்வுக்கு அனுப்பி வைத்தனர். உணவுப் பகுப்பாய்வு முடிவுகள் கிடைக்கப் பெற்றவுடன் மணிகண்டன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 
பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மதிப்பு ரூ.6.5 லட்சம் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தச் சோதனையின்போது வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சண்முகம், நரசிம்மன், காமராஜ், ஆதி, கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT