கோயம்புத்தூர்

"வரிசையில் நின்று தண்ணீரை வாங்க வேண்டிய நிலை வரும்'

7th Sep 2019 06:49 AM

ADVERTISEMENT

மழை நீரைச் சேமிக்காமலும், நீர் மேலாண்மையைச் செய்யாமலும் இருந்தால், பெட்ரோலைப் போல வரிசையில் நின்று தண்ணீரை வாங்க வேண்டிய நிலை ஏற்படும் என்று இந்திய அறிவியல் கழக முன்னாள் ஆராய்ச்சியாளரும், நீர் மேலாண்மை ஆலோசகருமான ஏ.ஆர்.சிவகுமார் எச்சரித்துள்ளார்.
கோவை சிறுதுளி அமைப்பின் சார்பில் வீடுகள், தொழில் நிறுவனங்களில் மழை நீர் சேகரிப்பைச் செயல்படுத்துவது குறித்த வழிகாட்டும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது:
எதிர்காலத்தில் தண்ணீர்ப் பற்றாக்குறை வரும் என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் தற்போதே பற்றாக்குறை நிலையில்தான் இருக்கிறோம். ஒவ்வொரு துளி மழை நீரையும் சேமிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் அனைவரும் இருக்கிறோம். பெங்களூருவில் சுமார் 800 தண்ணீர் ஏ.டி.எம்.கள் வந்துவிட்டன. மழை நீரைச் சேமிக்காமலும், நீர் மேலாண்மையைச் செய்யாமலும் இருந்தோம் என்றால், பெட்ரோல் வாங்க வரிசையில் நிற்பதைப்போல அதிக பணம் கொடுத்துத்தான் குடிப்பதற்கு நீரை வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோம்.
கோவை சராசரியாக ஓராண்டுக்கு 5 மாதங்கள் வரை மழைப் பொழிவு கிடைக்கும் பகுதி. மழை நீரை சரிவர சேமித்தால் நீருக்காக வேறு யாரையும் எதிர்பார்த்து காத்திருக்கத் தேவையில்லை என்றார்.
நிகழ்ச்சியில், சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், அமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT