கோயம்புத்தூர்

மாவட்ட அளவிலான தபால் தலை கண்காட்சி தொடக்கம்

7th Sep 2019 06:50 AM

ADVERTISEMENT

கோவைக் கோட்ட அஞ்சல்துறை சார்பில் நடைபெறும் மாவட்ட அளவிலான தபால் தலைக் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது. 
மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கோவை கோட்ட அஞ்சல் துறை சார்பில் மாவட்ட அளவிலான தபால் தலை கண்காட்சி தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
கண்காட்சியை மேற்கு மண்டல அஞ்சல் துறைத் தலைவர் ஷியூலி பர்மன் துவக்கி வைத்தார். கோவை கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளர் சுதிர் கோபால் ஜாக்ரே வரவேற்றார். 
கண்காட்சியில் காதி, கோவை தபால் தலை மற்றும் நாணயம் சேகரிப்போர் சங்கத்தைச் சேர்ந்தோரை கொரவிக்கும் வகையில் சிறப்பு தபால் உறைகள் வெளியிடப்பட்டன.
தபால் தலைகளின் வரலாறு, தேவைகள், பல்வேறு காலகட்டங்களில் வெளியிடப்பட்ட முக்கியமான தபால் தலைகள் உள்ளிட்டவற்றை விளக்கும் வகையில் இந்தக் கண்காட்சி அமைந்திருந்தது. மொத்தம் 200க்கும் மேற்பட்ட தபால் தலைகள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. 
பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் கண்காட்சியைப் பார்வையிட்டனர். கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த தபால் தலைகள் குறித்து மாணவர்கள் கேட்ட சந்தேகங்களுக்கு அஞ்சல் துறையினர் விளக்கம் அளித்தனர். வெள்ளிக்கிழமை தொடங்கிய இக்கண்காட்சி சனிக்கிழமையுடன்(செப்டம்பர் 7) நிறைவடைகிறது.  இதில் மகாத்மா காந்தியின் வாழ்க்கையை மையப்படுத்தி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி, கட்டுரை மற்றும் விநாடி-வினா போட்டிகள் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT