கோயம்புத்தூர்

பில்லூர் அணையில் தண்ணீர் திறப்பு: 6,750 கன அடியாக குறைப்பு

7th Sep 2019 06:54 AM

ADVERTISEMENT

மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு வெள்ளிக்கிழமை விநாடிக்கு 6,750 கன அடியாகக் குறைக்கப்பட்டது.
 கேரளம் மற்றும் தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தை ஒட்டி உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த 3 நாள்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பில்லூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்ததால் அணையின் பாதுகாப்புக் கருதி விநாடிக்கு 14 ஆயிரம் கன அடி தண்ணீர் வியாழக்கிழமை திறந்து விடப்பட்டது.  இதனால் மேட்டுப்பாளையம், சிறுமுகை பகுதியில் உள்ள பவானி ஆற்றங்கரையோரம் மக்களுக்கு வருவாய்த் துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
 இந்நிலையில் பில்லூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்ததால் வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் தண்ணீர் திறப்பு விநாடிக்கு 6,750 கனஅடியாக குறைக்கப்பட்டது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து சிறு இடைவெளி விட்டு கனமழை பெய்து வருவதால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்தும், அதிகரித்தும் வந்த வண்ணம் உள்ளது. இதனால் அணைக்கு எந்த நேரத்தில் தண்ணீர் அதிக அளவில் வரும் என்பது தெரியாததால் பவானி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் தொடர்ந்து பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT