கோயம்புத்தூர்

நொய்யலில் 2 -ஆவது நாளாக வெள்ளம்

7th Sep 2019 06:59 AM

ADVERTISEMENT

மேற்குத் தொடர்ச்சி மலை, சிறுவாணி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சிறுவாணி அணைப் பகுதியில் 95 மி.மீ. மழை பதிவானது. 
மேற்குத் தொடர்ச்சி மலை, சிறுவாணி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த 10 நாள்களாக கனமழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வியாழக்கிழமை விநாடிக்கு 800 கனஅடி தண்ணீர் ஆற்றில் வெளியேறியதால், பேரூர் படித்துறையைத் தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.  இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை விநாடிக்கு 450 கன அடி தண்ணீர் வழிந்தோடியது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT