கோயம்புத்தூர்

நிரம்பியது குனியமுத்தூர் செங்குளம்

7th Sep 2019 06:53 AM

ADVERTISEMENT

கோவை, குனியமுத்தூர் பகுதியில் உள்ள செங்குளம் நீண்ட நாள்களுக்குப் பின் நிரம்பியதால் அப்பகுதி மக்கள் குளத்தில் மலர் தூவி வெள்ளிக்கிழமை வழிபட்டனர்.
தென்மேற்குப் பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால் கோவை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. குறிச்சிக் குளம், உக்கடம் பெரியகுளம், முத்தண்ணன் குளம் உள்ளிட்ட குளங்கள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. 
நீர்வரத்து அதிகரித்ததால் செங்குளமும் நிரம்பும் நிலையில் இருந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களாக நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து செங்குளம் வெள்ளிக்கிழமை நிரம்பியது. 
இந்தக் குளத்தில் நீர் நிறைய வேண்டும் என வருண பூஜை செய்து குளத்தை தூர் வாரும் பணியில் ஈடுபட்ட செங்குளம் பாதுகாப்பு இயக்கத்தினர் வருண பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக குளக்கரையில் வெள்ளிக்கிழமை படையலிட்டு பூஜை செய்தனர். பின் குளம் நிறைந்ததைக் கொண்டாடும் விதமாக அப்பகுதி மக்கள் மலர் தூவி வழிபட்டனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT