கோயம்புத்தூர்

தொடர் மழை: நிரம்பி வழியும் மலம்புழா அணை

7th Sep 2019 07:18 AM

ADVERTISEMENT

கேரளத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலம்புழா அணை நிரம்பியதால் அணையிலிருந்து வியாழக்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டது.
 கேரள மாநிலத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை நீடித்து வருகிறது. மலம்புழா அணைப் பகுதியில் 31.70 மி.மீ. மழை பதிவானது. மேலும் ஆணைமலை பகுதிகளில் இருந்து தொடர்ந்து அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் வியாழக்கிழமை 15 செ.மீ. அளவுக்கு அணையின் மதகுகள் திறக்கப்பட்டு, தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை கூடுதலாக 5 செ.மீ. அளவுக்கு மதகுகள் திறக்கப்பட்டது. அணையில் திறக்கப்படும் நீர் பாலக்காடு, ஒத்தப்பாலம் ஆற்றின் வழியாக சென்று பாரதப்புழா ஆற்றில் கலக்கிறது. 
 மலம்புழா அணையின் மொத்த கொள்ளளவு 115.06 அடி. அணையில் தற்போது 114.09 அடி நீர் உள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT