கோயம்புத்தூர்

துடியலூரில் பட்டயக் கணக்காளர்கள் இரண்டு நாள் மாநாடு தொடக்கம்

7th Sep 2019 06:59 AM

ADVERTISEMENT

துடியலூரில் உள்ள இந்திய பட்டயக் கணக்காளர் சங்க கோவை கிளையில் பட்டயக் கணக்காளர்களுக்கான இரண்டு நாள் மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இன்றைய பொருளாதாரச் சூழ்நிலை, பட்டயக் கணக்காளர் துறையில் ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்து நடைபெற்ற இம்மாநாட்டில் கோவைக் கிளைத் தலைவர் பி.பாலசுப்பிரமணி வரவேற்றார். தென் மண்டலச் செயலாளர் சி.கே.ஜலபதி தலைமை வகித்தார். அகில இந்திய பட்டயக் கணக்காளர் சங்க முன்னாள் தலைவர் ஜி.ராமசாமி சங்கத்தின் தென் மண்டலத் தலைவர் ஜோமோன் ஜார்ஜ், மத்தியக் குழு உறுப்பினர் ரஞ்சித்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 சிறப்பு விருந்தினராக பொள்ளாச்சி எம்.பி. கு.சண்முகசுந்தரம் பங்கேற்று, இன்றைய பொருளாதார சூழ்நிலை, கோவை மண்டலத்தில் தொழில்முனைவோர் எதிர்கொண்டுள்ள சாவல்கள், குறிப்பாக கட்டுமானத் துறை, ஜவுளித் துறை ஆகியவற்றை மேம்படுத்த பட்டயக்கணக்காளர்களின் செய்யவேண்டிய உதவிகள் குறித்து பேசினார்.
தொடர்ந்து நடைபெற்ற அமர்வுகளில் கேபிடல் கெயின்ஸ், ஆடிட்டிங் ஸ்டேட்மெண்ட்ஸ், கோட் ஆப் எதிக்ஸ், ஐசிடிஎஸ், ஜிஎஸ்டி உள்ளிட்ட தலைப்புகளில் டி.ஜி.சுரேஷ், ஜோமோன் ஜார்ஜ், வி.ராம்நாத், ரஞ்சித்குமார் அகர்வால், ரோகிணி அகர்வால், வினோத் கே.சிங்கானியா ஆகியோர் பேசினர்.
இம்மாநாட்டில் கோவை, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பட்டயக்கணக்காளர்கள் திரளாக கலந்து கொண்டனர். கோவை கிளை செயலாளர் எஸ்.பிரபு நன்றி கூறினார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT