கோயம்புத்தூர்

சாலையோர மரத்தில் வேன் மோதியதில் ஓட்டுநர் பலி

7th Sep 2019 06:50 AM

ADVERTISEMENT

அன்னூர் அருகே சாலையோர மரத்தில் வேன் மோதியதில் அதன் ஓட்டுநர் உயிரிழந்தார்.
சத்தியமங்கலம், பனையம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் சத்தியமூர்த்தி (22). இவர் வியாழக்கிழமை அதிகாலை அன்னூர் - புளியம்பட்டி சாலையில் வேன் ஓட்டிச் சென்றுகொண்டிருந்தார்.
 பட்டக்காரன்புதூர் அருகே சென்றபோது சாலையோரத்தில் இருந்த புளியமரத்தில் எதிர்பாராதவிதமாக வேன் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சத்தியமூர்த்தி உயிரிழந்தார். 
இதுகுறித்து அன்னூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT