கோயம்புத்தூர்

சட்டவிரோத மது விற்பனையை தடுக்க பாமக வலியுறுத்தல்

7th Sep 2019 06:58 AM

ADVERTISEMENT

கோவை மாவட்டத்தில் சட்ட விரோதமாக நடைபெற்று வரும் மது விற்பனையைத் தடுக்க நடிவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக கோவை மாநகர் மாவட்டத் தலைவர்  ப.குமார், மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தார். 
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் மதுக் கடைகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும், மது விற்பனை நேரத்தைக் குறைக்கவும்  பாமக சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் மாநகர், புறநகர்ப் பகுதிகளில் பெரும்பான்மையான  மதுக்கூடங்களில் 24 நேரமும் மது விற்பனை நடைபெற்று வருகிறது. அனுமதித்த நேரத்துக்கும் கூடுதலாக சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறும் மதுக்கூடங்களை கண்காணித்து, அதைத் தடுக்க வேண்டும். இது தொடரும்பட்சத்தில் பொதுமக்களை திரட்டி பாமக சார்பில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT