கோயம்புத்தூர்

குடிநீர் கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

7th Sep 2019 06:52 AM

ADVERTISEMENT

அன்னூர் அருகே உள்ள மூக்கனூரில் முறையாக குடிநீர் விநியோகிக்க கோரி  அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.
அன்னூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட மூக்கனூரில் கடந்த சில மாதங்களாக 20 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே ஆற்று குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாகவும், ஆழ்துளை குழாய் நீரும் முறையாக விநியோகிக்கப்படுவதில்லை எனவும் கூறி அப்பகுதி பொதுமக்கள் 80 பேர் ஊராட்சி ஒன்றிய அலுவலக்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயராணி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இன்னும் ஒரு வாரத்தில் ஆழ்துளை கிணற்றை ஆழப்படுத்ததியும், ஆற்று குடிநீர் முறையாக விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT