கோயம்புத்தூர்

காலமானார்: காட்மா சங்கத் தலைவர் எஸ்.ரவிகுமார்

7th Sep 2019 06:57 AM

ADVERTISEMENT

கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில், ஊரகத் தொழில்முனைவோர் சங்கத்தின் (காட்மா) தலைவர் எஸ்.ரவிகுமார் (50) உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை (செப்.6) காலமானார்.
கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோரின் பல்வேறு பிரச்னைகளுக்காக ரவிகுமார் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த இவர், கணுவாயில் உள்ள தனது வீட்டில் வெள்ளிக்கிழமை காலமானார். இவரது உடலுக்கு பல்வேறு தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள், காட்மா சங்க நிர்வாகிகள், தொழில்முனைவோர் அஞ்சலி செலுத்தினர். இவரது இறுதிச் சடங்குகள் துடியலூர் மின் மயானத்தில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகின்றன. மறைந்த எஸ்.ரவிகுமாருக்கு ஆர்.கோகிலா என்ற மனைவியும், ஆர்.சஞ்சீவ், ஆர்.சரண் என்ற இரு மகன்களும் உள்ளனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT