கோயம்புத்தூர்

காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

7th Sep 2019 06:58 AM

ADVERTISEMENT

முன்னாள்  மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அன்னூர் பணியர் மாளிகை முன் காங்கிரஸ் கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அன்னூர் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் கோபி தலைமை வகித்தார். மாநில பேச்சாளர் காளிசாமி, வட்டார தலைவர்கள் தங்கம் பழனிசாமி, பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கைதுசெய்யப்பட்டதை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண் உள்பட 46 பேரை போலீஸார் கைது செய்து இப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். பின்னர் மாலையில் அவர்கள் அனைவரையும் விடுவித்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சத்தியபிரீத்தா, நகரத் தலைவர் அப்துல்கரீம், மாவட்டச் செயலாளர் கருப்புசாமி, சௌந்தர்ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT