கோயம்புத்தூர்

கதிர் கல்வி நிறுவனத்துக்கு விருது

7th Sep 2019 06:57 AM

ADVERTISEMENT

கோவை கதிர் கல்வி நிறுவனம் சிறந்த திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனத்துக்கான விருது பெற்றுள்ளது.
 இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
 லாமிகா அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் கதிர் கல்வி நிறுவனத்தில், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சுய வேலைவாய்ப்புப் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் ஏராளமான இளைஞர்களுக்கு பல்வேறு வேலைவாய்ப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தின் சிறந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி நிறுவனமாக கதிர் கல்வி நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
 இதையடுத்து சென்னையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க முதன்மைச் செயல் அலுவலர் பிரவீன் நாயர் பங்கேற்று கதிர் கல்வி நிறுவனத்தின் செயலாளர் லாவண்யா கதிருக்கு அதற்கான சான்றிதழை வழங்கினார். இந்த விழாவில் மத்திய, மாநில ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT