கோயம்புத்தூர்

இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

7th Sep 2019 06:56 AM

ADVERTISEMENT

மேட்டுப்பாளையத்தில் குப்பைகளை அகற்ற நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 ஆர்ப்பாட்டத்துக்கு நகரச் செயலாளர் பழனிசாமி தலைமை வகித்தார். ஏஐடியூசி தாலுகா செயலாளர் சக்திவேல் குமரன், இந்திய கம்யூனிஸ்ட் மேற்கு கிளை செயலாளர் வெள்ளிங்கிரி, ஏஐ.ஒய்.எஃப் தாலுகா செயலாளர் மன்சூர், நகர கமிட்டி அய்யாவு ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
 இதில் மேட்டுப்பாளையம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்காக சேதப்படுத்திய சாலைகளை போர்க்கால அடிப்படையில் உடனடியாக சீரமைக்க வேண்டும். பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். நகராட்சியில் அதிகரிக்கப்பட்ட சொத்து, குப்பை வரிகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். நகராட்சி நிலவும் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரப் பகுதியில் குப்பைகளை அகற்ற வேண்டும். மக்கள் தொகைக்கு ஏற்ப நகராட்சி நிர்வாகம் துப்புரவுப் பணியாளர்களை பணியமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். முடிவில் நகர செயலாளர் சண்முகம் நன்றி கூறினார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT