கோயம்புத்தூர்

வால்பாறையில் கனமழை: ஆறுகளில் நீர்வரத்து அதிகரிப்பு

4th Sep 2019 08:38 AM

ADVERTISEMENT

வால்பாறையில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
வால்பாறை பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதில் கடந்த மாதம் 1-ஆம் தேதி முதல் இரண்டு வாரங்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணை கடந்த 20 தினங்களுக்கு முன் நிரம்பியது. 
இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக விட்டுவிட்டு மழை பெய்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாள்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 
கடந்த திங்கள்கிழமை பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): வால்பாறை 38, சின்னக்கல்லாறு 62, நீராறு அணை 44, சோலையாறு அணை 49. சோலையாறு அணைக்கு விநாடிக்கு 2616.08 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது.  அணையில் இருந்து 2007.52 கனஅடிநீர் வெளியேற்றப்பட்டு 
வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 161.57 அடியாக உள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT