கோயம்புத்தூர்

லாரி மோதியதில் பெண் பலி

4th Sep 2019 08:38 AM

ADVERTISEMENT

சூலூர் அருகே வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த பெண் மீது லாரி மோதியதில் அவர் உயிரிழந்தார்.
 சூலூரை அடுத்த அருகம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செங்காளி (57). கூலி தொழிலாளி. இவரது மனைவி பழனியம்மாள் (54). இவர் செவ்வாய்க்கிழமை தனது வீட்டின் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் அவ்வழியே வேகமாக வந்த ஒரு லாரி பழனியம்மாள் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 இதுகுறித்த புகாரின்பேரில் சூலூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் ராஜேந்திரனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT