கோயம்புத்தூர்

மு.க.ஸ்டாலின் இன்று கோவை வருகை

4th Sep 2019 08:42 AM

ADVERTISEMENT

திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் மு.கண்ணப்பன் எழுதியுள்ள "வாழ்வும் பணியும்' நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை (செப்டம்பர் 4 )கோவை வருகிறார். 
திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் மு.கண்ணப்பன் "வாழ்வும் பணியும்' என்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூலின் வெளியீட்டு விழா, ஈச்சனாரி - செட்டிபாளையம் சாலையில் உள்ள செல்வம் மஹாலில் வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது.  தலைமை செயற்குழு உறுப்பினர் மு.க.முத்து வரவேற்கிறார். முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி தலைமை வகிக்கிறார். 
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார். மக்களவை உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, அ.ராசா ஆகியோர் நூல்களின் முதல் இரண்டு பிரதிகளைப் பெற்றுக்கொண்டு உரையாற்றுகின்றனர். கோவை மாநகர் மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக், கோவை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் உள்ளிட்ட முக்கிய திமுக நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். 
முன்னதாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை மாலை 8 மணிக்கு விமானம் மூலம் கோவை வருகிறார். வியாழக்கிழமை காலை ஈரோட்டில் நடைபெறும் கட்சி நிர்வாகி வீட்டுத் திருமண விழாவில் கலந்து கொள்கிறார். மாலை கோவை திரும்பும் அவர் மு.கண்ணப்பனின் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்கிறார். இரவு சென்னை புறப்பட்டுச் செல்கிறார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT