கோயம்புத்தூர்

மாநில அளவிலான விநாடி- வினா போட்டி: கோவை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் வெற்றி

4th Sep 2019 08:38 AM

ADVERTISEMENT

கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான விநாடி- வினா போட்டியில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
குழந்தைகள் நலப் பிரிவு மருத்துவம் சார்பில் ஆண்டுதோறும் மாணவர்களுக்கு மாநில அளவிலான விநாடி- வினா போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான விநாடி-வினா போட்டியில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி, தேனி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி, பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி உள்பட 15 மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். 
ஒவ்வொரு கல்லூரியில் இருந்தும் 2 மாணவர்கள் அடங்கிய குழு பங்கேற்றது. இதில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் வெற்றிபெற்றனர். 2 ஆம் இடத்தை மதுரை அரசு மருத்துவக் கல்லூரியும், 3 ஆம் இடத்தை தேனி மருத்துவக் கல்லூரியும் பெற்றன. 
இவர்கள் அடுத்து தென்னிந்திய அளவில் நடைபெறும் விநாடி- வினா போட்டியில் பங்கேற்கத் தேர்வாகியுள்ளனர். 2 ஆவது ஆண்டாக விநாடி - வினா போட்டியில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் வெற்றிபெற்றினர். நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி முதல்வர் பூ.அசோகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT