கோயம்புத்தூர்

மாநகராட்சி குடிநீர் திட்டத்துக்கு விருது 

4th Sep 2019 08:42 AM

ADVERTISEMENT

கோவை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ள 24 மணி நேர குடிநீர் விநியோகத் திட்டத்துக்கு "ஸ்காட்ச்' என்ற தனியார் தொண்டு நிறுவனம் விருது வழங்கி கெளரவித்துள்ளது. 
 "ஸ்காட்ச்' என்ற தனியார் தொண்டு நிறுவனம் இந்திய அளவில் ஆட்சி சீர்திருத்தங்கள், சிறப்புத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தும் அரசுத் துறைகள் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் திட்ட அறிக்கையை ஆய்வு செய்துசிறப்பான திட்டங்கள், செயல்பாடுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கி கெளரவித்து வருகிறது. 
2019-ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா அண்மையில் புதுதில்லியில் நடைபெற்றது. நாடு முழுவதும் இருந்து 
மாநகராட்சி, தன்னார்வ அமைப்புகள் சார்பில் 250-க்கும் மேற்பட்ட திட்ட அறிக்கைகள், விருதுக்கு சமர்பிக்கப்பட்டன. இதில், கோவை மாநகராட்சி சார்பில், மாணவர்களுக்கு கல்வியோடு, பல்வேறு கலைகளைக் கற்றுத் தரும் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, மக்கும், மக்காதக் குப்பைகளை தரம் பிரிக்கும் திட்டம், மியாவாக்கி முறையில் மரக்கன்று நடுதல் மற்றும் 24 மணி நேர குடிநீர் விநியோகத் திட்டம் என 4 திட்டங்கள் சமர்பிக்கப்பட்டு, அரையிறுதிக்கு தேர்வாகின. 
அதில் மக்களுக்குப் பயனளிக்கும் சிறந்த திட்டமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 24 மணி நேர குடிநீர் விநியோகத் திட்டத்துக்கு "ஸ்காட்ச்' வெள்ளி விருது வழங்கப்பட்டது. மாநகராட்சி சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் இந்த விருதைப் பெற்றுக் கொண்டனர்.
 மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண் குமார் ஜடாவத், "ஸ்காட்ச்' வெள்ளி விருதை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றார். மாநகராட்சி துணை ஆணையர் பிரசன்ன ராமசாமி, மாநகராட்சிப் பொறியாளர் லட்சுமணன் ஆகியோர் உடனிருந்தனர். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT