கோயம்புத்தூர்

பள்ளிச் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: முதியவர் கைது

4th Sep 2019 08:43 AM

ADVERTISEMENT

கோவை, பேரூர் அருகில் உள்ள சுண்டப்பாளையம் பகுதியில் மூன்று பள்ளிச் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
கோவையில் உள்ள கிராமப்புறப் பள்ளிகளில் தமிழ்நாடு அரசு சமூகநலத் துறை சார்பாக குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கடந்த ஓராண்டு காலமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் பேரூர் அருகில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மத்திய அரசின் "ஒன் ஸ்டாப் சென்டர்' என்ற அமைப்பு, குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. விழிப்புணர்வு நிகழ்ச்சி முடிந்த நிலையில் அப்பள்ளியில் பயிலும் மாணவியர் மூன்று பேர் அங்கு வந்த அதிகாரியிடம் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் தொடர்பாகத் தெரிவித்தனர். 
இதையடுத்து சமூகநலத் துறை அதிகாரி ஒருவர் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சம்பவம் தொடர்பாக புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை செய்தனர். அதில் பேரூரை அடுத்த சுண்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி பெருமாள்சாமி (72) என்பவர் தனது தோட்டத்துக்கு இலைகளைப் பறிக்க வந்த மூன்று பள்ளிச் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும், அதை வெளியே சொல்லக் கூடாது என மிரட்டியதும் தெரியவந்தது. 
இதையடுத்து பெருமாள்சாமி மீது குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை (போக்சோ) சட்டத்தில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் அவரை திங்கள்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT