கோயம்புத்தூர்

நீர் வள பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

4th Sep 2019 08:44 AM

ADVERTISEMENT

காரமடையில் உள்ள இந்திய வேளாண் அறிவியல் ஆராய்ச்சி  நிலையத்தில் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் நீர் வள பாதுகாப்பு  குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 
வேளாண் பொறியியல் துறை வல்லுநர் நாகராஜ் பிரெட்ரிக் வரவேற்றார். வேளாண் அறிவியல் ஆராய்ச்சி கழக முதன்மை விஞ்ஞானி மற்றும் தலைவர் குமாரவடிவேல் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் காரமடை, வெள்ளியங்காடு, சீளியூர், புஜங்கனூர் 4 அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நீர் வளம் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேச்சு, ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 
நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் கால்நடை மருத்துவமனை மருத்துவர் ராஜாங்கம்  சிறப்புரையாற்றினர். உழவியல் துறை வல்லுனர் சுரேஷ்குமார், மண்ணியல் துறை சுகந்தி, பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா மிஷன் வேளாண் பல்கலை கழக கிராமப்புற விவசாய வேளாண் அனுபவ பயிற்சி திட்ட மாணவர்கள், அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரிய ஆசிரியைகள், விவசாயிகள்  உள்பட பலர்  கலந்து கொண்டனர். மனையில் துறை வல்லுநர் கோமதி நன்றி கூறினார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT