கோயம்புத்தூர்

நடப்பு நிதியாண்டில் ரூ.549 கோடி பிரீமியம்  வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிப்பு: எல்ஐசி முதுநிலை கோட்ட மேலாளர் தகவல்

4th Sep 2019 08:43 AM

ADVERTISEMENT

நடப்பு நிதி ஆண்டில் (2018-19) கோவை கோட்டத்தில் ரூ.549 கோடி பிரீமியம் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என எல்ஐசி முதுநிலை கோட்ட மேலாளர் பி.ஜெ.நிக்கல்சன் கூறினார்.
 எல்.ஐ.சி கோவை கோட்டத்தில் காப்பீட்டு வார விழா செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவை - திருச்சி சாலையில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவுக்கு முதுநிலை கோட்ட மேலாளர் பி.ஜெ.நிக்கல்சன் தலைமை வகித்து காப்பீட்டு வார விழா மலரை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:
 26 கிளைகள், 20 துணை அலுவலகங்கள், 22 சிறு அலுவலகங்கள், 11 ஆயிரத்து 855 முகவர்களுடன் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் எல்.ஐ.சி. கோவை கோட்டம் செயல்பட்டு வருகிறது. 2018-19ஆம் ஆண்டில் 1 லட்சத்து 62 ஆயிரத்து 076 பாலிசிகளும், ரூ.386.42 கோடி பிரீமியம்வருவாயும் ஈட்டப்பட்டது. 2019-20ஆம் நிதி ஆண்டுக்கு 1 லட்சத்து 92 ஆயிரம் பாலிசிகளும், ரூ.549 கோடி பிரீமியம் வருவாயும் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
நடப்பு நிதி ஆண்டில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை 51 ஆயிரத்து 201 பாலிசிகளும், ரூ.232.62 கோடி பிரீமியம் வருவாயும் ஈட்டப்பட்டுள்ளது என்றார்.
 நிகழ்ச்சியில், கோவை கோட்ட வர்த்தகப் பிரிவு மேலாளர் ஆர்.பன்னீர்செல்வம், விற்பனைப் பிரிவு மேலாளர் டி.கிரிமாணிக்கவாசகம், நான்கு 
மாவட்ட எல்ஐசி முகவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT