கோயம்புத்தூர்

திமுக இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டம்

4th Sep 2019 08:40 AM

ADVERTISEMENT

கோவை மாநகர் மாவட்டத்தின்  இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் திமுக அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநில இளைஞரணி துணைச்செயலாளர் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார். 
கோவை மாநகர் மாவட்டத்தின்  இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் வடகோவையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில், மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திமுக மாநில இளைஞரணி துணைச்செயலாளர் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகையில், "விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ளதால், தமிழகம் முழுவதும் 234 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும்  உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்த வேண்டும். இளைஞரணியினர், மூத்தோர்களின் அறிவுரையைப் பெற்றுப் பணியாற்ற வேண்டும். 30 லட்சம் இளைஞர்களை, இளைஞரணியில் இணைக்க வேண்டும் என்றார். 
இக்கூட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிச்சாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் கோட்டை அப்பாஸ், தளபதி இளங்கோ உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT