கோயம்புத்தூர்

சூலூர் ஏரோ கேரளா கிளப் சார்பில் ஓணம் விழா கொண்டாட்டம்

4th Sep 2019 08:40 AM

ADVERTISEMENT

கோவை மாவட்டம், சூலூர் ஏரோ கேரளா கிளப், காடம்பாடி, காங்கேயம்பாளையம் மலையாளி சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 8) ஓணம் விழா கொண்டாடப்பட உள்ளது.
 சூலூரில் உள்ள கொங்கு கல்யாண மண்டபத்தில் காலை 10.30 மணிக்குத் தொடங்கும் இந்த விழாவில், பரதநாட்டியம், திருவாதிரை களி நடனம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதைத் தொடர்ந்து சிறப்பு பொதுக்குழுக் கூட்டம், ஓணம் விருந்து ஆகியவை நடைபெறுகின்றன. பிற்பகலில் திருச்சூர் பீட்ஸ் குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த விழாவில் தமிழக சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கேரள நீர்வளத் துறை அமைச்சர் கே.கிருஷ்ணன் குட்டி, கோவை எம்.பி. நடராஜன் உள்ளிட்டோர் கலந்துகொள்ள இருப்பதாக சூலூர் ஏரோ கேரளா கிளப் நிறுவனத் தலைவர் ஏ.கே.ஜான்சன் தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT