கோயம்புத்தூர்

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் ஒருவர் சாவு

4th Sep 2019 08:40 AM

ADVERTISEMENT

துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 துடியலூர் அருகே உள்ள ரங்கம்மாள் காலனி, நர்மதை வீதியைச் சேர்ந்தவர் சசிகுமார் (46). இவர்  வெள்ளக்கிணறிலிருந்து கணபதி செல்லும் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தார்.
 அப்பகுதியில் தனியார் பள்ளி அருகே சென்றபோது எதிரே வந்த லாரி இவர் மீது மோதியது. இதில் சசிகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
இதுகுறித்து சசிகுமாரின் மகன் பிராசாந்த் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் பூதலிங்கம் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT