கோயம்புத்தூர்

அனுமந்தராய சுவாமி கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

4th Sep 2019 08:37 AM

ADVERTISEMENT

 

மேட்டுப்பாளையம் அருகே உள்ள அனுமந்தராய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை (செப்டம்பர் 5) நடைபெற உள்ளது. 

மேட்டுப்பாளையம் அருகே இடுகம்பாளையம் கிராமத்தில் மன்னர் கிருஷ்ண தேவராயர் காலத்தில் வியாசராயரால் சுமார் 750 ஆண்டுகளுக்கு முன் சுயம்பு பாறையில் அனுமந்தராய சுவாமி புடைப்பு சிற்பமாக உருவாக்கப்பட்டது. இக்கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை காலை 9 மணியில் இருந்து 10.30 மணிக்குள் நடைபெற உள்ளது.

விழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணி முதல் 8.30 மணி வரை ஆசார்வர்ணம், அங்குரார்ப்பணம், வாஸ்து சாந்தி, ம்ருத்சங்கரணம், பாலிகா ஸ்தாபனம், யாக சாலை பிரவேசம், திவ்யபிரபந்த தொடக்கம், திருவாராதனம், பூர்ணாஹுதி சாற்றுமுறை நடைபெற்றது.

ADVERTISEMENT

புதன்கிழமை காலை 6 மணி முதல் 10 மணி வரை திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை, திவ்ய பிரபந்த சேவா காலம், வேதபாராயணம், உத்ஷவர் திருமஞ்சனம், பிற்பகல் 1 மணி முதல் மாலை 3 மணி வரை உபசாரங்கள் சாற்றுமுறை, மாலை 6 மணி முதல் 9 மணி வரை நிமிலோன் நயனம், திருவாரதனம், சாற்றுமுறை விமான கலஸ்தாபனம், உத்ஷவர் யாகசாலை பிரவேசம் நடைபெறுகிறது. 

வியாழக்கிழமை காலை 6 மணி முதல் 9 மணி வரை திருப்பள்ளி எழுச்சி யாகசாலை ஹோமம், திவ்ய பிரபந்தம், வேதபாராயணம், மஹாபூர்ணஹுதி, யாத்ராதானம் கும்ப உத்தாபணம், காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை கலசத்துக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT