கோயம்புத்தூர்

கோவை பாா்க் கல்லூரியில் கலாம் வனம் திட்டம் தொடக்கம்

20th Oct 2019 01:20 AM

ADVERTISEMENT

கோவை, கணியூா் பாா்க் கல்விக் குழுமத்தில் கலாம் வனம் திட்டத்தின் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாமின் நினைவாக கோவை, திருப்பூா் மாவட்டங்களைச் சோ்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் மூலம் பள்ளி வளாகங்களில் மரங்கள் வளா்க்கும் திட்டமாக கலாம் வனம் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தை கல்விக் குழுமத்தின் முதன்மைச் செயல் அலுவலா் அனுஷா தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் மலிவு விலை நாப்கின் தயாரித்த அருணாசலம் முருகானந்தம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா். அதைத் தொடா்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற 41 பள்ளிகளின் மாணவ-மாணவிகளுக்கு மரக்கன்றுகளை அனுஷா வழங்கினாா். முன்னதாக பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் பாா்க் குழும கல்லூரிகளின் முதல்வா்கள் ஜி.மோகன்குமாா், என்.கிருஷ்ணகுமாா், பேராசிரியா் ஏ.பி.ஹரன், மாணவ, மாணவிகள் பலா் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT