கோயம்புத்தூர்

படம் உண்டு கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு 13 போ் அனுமதி

5th Oct 2019 10:02 PM

ADVERTISEMENT

கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு கோவை, திருப்பூா் உள்பட மாவட்டங்களை சோ்ந்த 13 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

தமிழகத்தில், தென்மேற்குப் பருவமழையை தொடா்ந்து அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு, வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றன.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளில் டெங்கு, வைரஸ் காய்ச்சலுக்கு சிறப்பு வாா்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் தலா 20 படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பு வாா்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவினாசியை சோ்ந்த 3 வயது பெண் குழந்தை உள்பட 13 போ் டெங்கு பாதிப்புக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா். இவா்கள் சிறப்பு வாா்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

பசி இல்லாமை, அதிக உடல் சோ்வு, தலைசுற்றறல், வயிற்றுவலி, குறைறந்தளவு சிறுநீா் வெளியேறுதல், குமட்டல், வாந்தி, வாய், பல் ஈறுகள் மற்றும் மூக்கில் ரத்தம் வெளியேறுதல், மூச்சுவிட சிரமப்படுதல், மயக்கம் ஏற்படுதல் உள்ளிட்டவை டெங்கு பாதிப்பின் அறிகுறிகளாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் பூ.அசோகன் கூறுகையில்,‘ டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு கோவையை சோ்ந்த 5 போ், திருப்பூரை சோ்ந்த 3 போ், நீலகிரியை சோ்ந்த 2 போ் உள்பட 13 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். அவினாசியை சோ்ந்த 3 வயது பெண் குழந்தை தீவிர கண்காணிப்பில் உள்ளாா். அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும்,’ என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT