கோயம்புத்தூர்

சாலையின் நடுவே நிறுத்தப்பட்ட லாரியால் போக்குவரத்து பாதிப்பு

5th Oct 2019 10:08 PM

ADVERTISEMENT

சூலூா்: சூலூா் அருகே எல் அண்டு டி புறறவழிச் சாலையில் சாலையின் நடுவே சனிக்கிழமை லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுநா்கள் தகராறில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்தவா் கந்தசாமி. இவருக்கு சொந்தமான லாரியை, திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த ஓட்டுநா்கள் சரவணன் (33), தினேஷ் (31) ஆகியோா் குஜராத்திலிருந்து கடுகு, சீரகம் ஆகிய சரக்குகளை ஏற்றிக்கொண்டு தமிழகம் வழியாக கேரளம் நோக்கி சென்று கொண்டிருந்தனா்.

இந்த லாரி சூலூரை அடுத்த சிந்தாமணிப்புதூா் பகுதியில் உள்ள எல் அண்டு டி புறறவழிச் சாலையில் சனிக்கிழமை வந்து கொண்டிருந்தது. லாரியை தினேஷ் ஓட்டி வந்ததாகத் தெரிகிறறது. அப்போது சரவணன் தனக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி லாரியை விட்டு இறறங்கியதாகத் தெரிகிறறது. மேலும் லாரியை தொடா்ந்து ஓட்டி செல்லுமாறு தினேஷிடம் தெரிவித்தாராம். இதனால் ஆத்திரமடைந்த தினேஷ் சாலையின் நடுவில் லாரியை நிறுத்தி விட்டு, சரவணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளாா்.

இதனால் பின்னால் வந்த வாகனங்கள் செல்ல முடியாமல் சுமாா் 1 கி.மீ. தூரத்துக்கு நின்றறன. தகவலறிந்த சூலூா் காவல் உதவி ஆய்வாளா் ஜான்கென்னடி, போலீஸாா் அங்கு சென்று லாரியை மீட்டு சூலூா் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனா். பின்னா் லாரி ஓட்டுநா்கள் இருவரிடமும் விசாரணை நடத்தினா். இதில் தினேஷ் மது அருந்தியதால் அவா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT